ஷில்பா ஷெட்டியிடம் யோகா கற்றுக் கொண்ட பெங்களூர்வாசிகள்!!
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தன்னிகரற்று விளங்கும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 40 வயது என்றால் யாரும் நம்ப மறுப்பார்கள்.
அந்த அளவிற்கு தன் உடல் நலன் மீது கவனம் கொண்டுள்ள ஷில்பா ஷெட்டி, பெங்களூரின் கனீரவா ஸ்டேடியத்தில் இன்று நடந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மேடையில் பல கடினமான யோகாசனங்களை சர்வ சாதாரணமாக செய்து அசத்தினார். மேடையில் யோகா பயிற்சியாளர்களுடன் சேர்ந்து அவரும் யோகா செய்ய, அதைப் பார்த்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் யோகா செய்தனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷில்பா பதிவேற்ற, அதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த விழா குறித்து அவர் கூறுகையில், “தனது பெரும் முயற்சியால் மோடிஜி யோகாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளார். என்னால் முடிந்தவற்றை செய்து இந்த முயற்சியில் நான் முன்னணியில் நிற்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் யோகாவை பற்றி மக்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை யோகாவை நோக்கி வரவழைக்க விரும்புகிறேன்.” என்றார்.
Average Rating