பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!
பழைய வண்ணாரப் பேட்டை நரசிங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரமணி. இவரது மகன் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவரது மகன் வருகைக்காக வீட்டு கதவை திறந்து வைத்திருந்தார். உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு இருந்ததால் கண் அயர்ந்து தூங்கி விட்டார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்று விட்டான். பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.