யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!

Read Time:2 Minute, 33 Second

d941befa-3194-497a-ae1b-e18d068a875a_S_secvpfசூடான கருத்துகளால் ஊடகங்களுக்கு தீனி போட்டுவரும் சாத்வி பிராச்சி, யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி, ‘அழைப்பிதழ் அனுப்பிதான் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கு டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது அரசியல்வாதி தலைவர்களின் மகளின் திருமண நிகழ்ச்சி அல்ல.

இணைப்பு பாலமாக செயலாற்றும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியாவின் பாரம்பரியங்களுக்கும், கலாசாரங்களுக்கும் ஆட்சேபனை தெரிவிப்பது ஒருபோதும் ஜனநாயகம் ஆகாது. இந்த நாட்டின் நலனுக்காக அவர் (துணை ஜனாதிபதி) எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதை நானும் பல நாட்களாக பார்த்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி யோகா விழா தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்டபோது, “இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் அவர்களாகவே தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரிவிக்க கூடாது. அப்படி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் இந்தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம். இந்தியாவின் உணவை சாப்பிட்டுக் கொண்டு, பாகிஸ்தான் பாட்டு பாடிக் கொண்டிருக்க கூடாது” என்று சாத்வி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி.!!
Next post கே.ஜி.எப்.-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் ரூ.36 லட்சம் பணம், நகை திருட்டு!!