மலிவு விலை சிக்கன், மடக்கும் குடையை அடுத்து ஆடை தயாரிப்பில் இறங்கியுள்ள கேரள சிறைக்கைதிகள்!!

Read Time:1 Minute, 42 Second

8d3314df-5d79-4ed2-9625-7da128295dc7_S_secvpfஓணம் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கேரள வியாபாரிகளுக்கு லாரி லாரியாக அனுப்பி வரும் நிலையில், அதனுடன் போட்டி போடும் வகையில் கேரள சிறைக்கைதிகள் தயாரித்த ஆடைகளும் சந்தைக்கு வர இருக்கிறது.

திருவனந்தபுரம் பூஜாப்புரம் மத்திய சிறைச்சாலை மலிவு விலை சப்பாத்தி சிக்கன், மூன்றாக மடக்கும் குடை என்று தங்கள் தயாரிப்புகளால் கேரள மக்களிடையே பிரபலமானது. இந்நிலையில், தற்போது ‘சம்ரக்‌ஷா’ என்ற பெயரில் காட்டன் சட்டைகளையும் இந்த ஓணம் பண்டிகைக்காக இந்த சிறைச்சாலை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இதற்காக சிறைக் கைதிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, சிறையில் உள்ள நவீன இயந்திரங்களின் மூலமாக இந்த ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 260 ரூபாயிலிருந்து தொடங்குவதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தங்களது முந்தைய தயாரிப்புகளைப் போன்றே இந்த சட்டைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சிறைக்கைதிகள் காத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!
Next post கேரளா தலைமை செயலகம் அருகே பரபரப்பு: ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் நடிகரை சுற்றிவளைத்து கைது செய்த நிஜப் போலீசார்!!