விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு!!

Read Time:2 Minute, 28 Second

0c5c7965-2eac-414f-8ee7-bfdfaf88855f_S_secvpfமும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் படி இவர்களில் மூன்று பேர் காசநோய் மற்றும் நெஞ்சுவலி காரணமாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக விஷச்சாராயத்திற்கு பலியானவர்கள் 102 பேர் தான் என துணை போலீஸ் கமிஷனர் தனஞ்சய் குல்கர்ணி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் மற்றும் கலால் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ்காரர்கள் 8 பேர் மற்றும் கலால்துறையை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 12 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட னர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மன்சூர் லதிப் சேக் டெல்லிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் தான் சம்பவத்தன்று தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் காய்ச்சப்படும் சாராயத்தை மும்பையின் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்து வந்துள்ளார். அவரை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் அவர் விமானத்தில் மும்பை அழைத்து வரப்பட்டார்.

நேற்று போலீசார் மன்சூர் லதிப் சேக்கை மும்பை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை ஜூலை 3-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
Next post மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது!!