பழக்கத்தை தடுக்க நினைப்பது.அதை அதிகரிக்க செய்து விடும்; மன நல ஆராய்ச்சியாளர் கருத்து

Read Time:3 Minute, 33 Second

எந்த பழக்கத்தையாவது கைவிட வேண்டும் என்று கருதுகிறீர்களா? மற்றவர்களை விட, நீங்கள் அதை அதிகமாக பின்பற்றுவீர்கள். உதாரணமாக, குண்டாவதை தவிர்க்க சாக்லெட் சாப்பிடும் பழக் கத்தை கைவிட நினைப்பவர் கள், மற்றவர்கள் சாப்பிடும் சாக்லெட்களை விட 50 சதவீதம் அதிகமாக சாப்பிடுவர். பிரிட்டனின் ஹெர்ட் போர்ட்ஷைர் பல்கலைக் கழகத்தின் மனநல ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின், தனது ஆராய்ச்சி முடிவு தொடர்பாக “எதிர்ப்பு என்பது பயனற்றது’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: எந்த பழக்கத்தையாவது கைவிட நினைப்பதும், எந்த பொருளையாவது மறக்க நினைப்பதும், அதை அதிகமாக பின்பற்றவும், நினைக்கவும் வைக்கும்.உடல் பருமனுக்கு சாக் லெட்கள் முக்கிய காரணமாக உள்ளன. இதனால், சாக் லெட் சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று உறுதி எடுப்போர், அதையே நினைத்து, நினைத்து, அதிகளவில் சாக்லெட் சாப்பிடுகின்றனர். எனவே, சாக்லெட் சாப்பிடுவதை விட, அந்த பழக்கத் தை கைவிட வேண்டும் என்று நினைப்பது தான்ஆபத்தானது. 134 பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.எந்த வகையான சாக்லெட் டை அவர்கள் சாப்பிட விரும்பு கின்றனர் என்பதோடு, எவ்வளவு சாப்பிடுகின்றனர் என்பதும் கவனமாக ஆராயப் பட்டது.

பெண்களில், சாக்லெட் சாப்பிடும் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், சராசரியாக எட்டு கிலோ சாக்லெட் சாப்பிடுகின்றனர். கைவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பெண்கள் சராசரியாக சாப்பிடும் சாக் லெட் ஐந்து கிலோ மட்டுமே. ஆனால், ஆண்களில் இந்த தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது.எனவே, எடை குறைக்க விரும்புவோர், அதற்கு காரணமான உணவை கைவிட வேண்டும் என்று நினைப்பதை விட, அதை குறைத்துக் கொள்வதே நல்லது.

எந்த பழக்கத்தையாவது கைவிட நினைத்தால், அந்த பழக்கம் அதிகரிக்குமே தவிர, கைவிடவோ அல்லது குறைக்கவோ முடியாது.”இனி நான் சாக்லெட் சாப்பிட மாட்டேன்’ என்றோ, அல்லது, “இனி மேல் நான் மது அருந்த மாட்டேன்’ என்றோ, அல்லது, “இனி நான் புகைப் பிடிக்க மாட்டேன்’ என்றோ நீங்கள் எடுக்கும் உறுதிமொழி, அதையே நினைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஏற்படுத்தி விடும். கடைசியாக, கடைசியாக என்று அதிகளவில் கை விட நினைக்கும் பழக்கத்தை, அதிகரிக்கவே தூண்டும்.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரட்டை குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் மறுப்பு
Next post பக்ரைன் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்