தோற்றப்பொலிவில் ஆசிய குட்டீஸ் அதிருப்தி!

Read Time:3 Minute, 28 Second

anichild-hot.gifதோற்றப்பொலிவில் தங்கள் நிலை குறித்து, மற்ற நாட்டு குழந்தைகளை விட, ஆசிய நாடுகளை சேர்ந்த குழந்தைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இது தெரியவந்துள்ளது. பல நாடுகளில், பல இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் குழந்தைகள் உடல் எடை, தோற்றப்பொலிவு குறித்து, வட அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பு மற்றும் டெம்பிள் பல்கலைக்கழக நிபுணர்கள் சேர்ந்து இந்த சர்வேயை நடத்தினர். நான்காவது வகுப்பு முதல் ஆறாவது வகுப்பு வரை உள்ள ஐந்து ஆயிரம் குழந்தைகளிடம் சர்வே நடத்தப்பட்டது. குழந்தைகள், அதிக குண்டாக இருப்பது பற்றி ஆராய்ந்து வரும் இந்த அமைப்புகள், குழந்தைகளுக்கு தங்கள் தோற்றப்பொலிவு குறித்து என்ன கருத்து உள்ளது என்று ஆராய்ந்தன. மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகள், தாங்கள் குண்டாக இருப்பது பற்றியோ, தோற்றப்பொலிவு பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால், ஆசிய நாடுகளை சேர்ந்த குழந்தைகள், தங்கள் தோற்றப்பொலிவு குறித்து கவலை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கலாச்சார அடிப்படையில் பார்த்தால், ஆசிய நாடுகளில், குண்டாக இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு த்தான் அதில் அதிருப்தி காணப்படுகிறது. பல ஆண்டாக கணக்கிட்டால், ஆசிய குழந்தைகள், குண்டாக இருந்ததே இல்லை. சுமாரான தோற்றப்பொலிவுடன் இருப்பர். சமீப காலமாக, அவர்களின் உணவு முறை, வாழ்க்கை முறை மாறியதை அடுத்து, அவர்களுக்கு எடை அதிகரித்து விட்டது.

இனத்தின் அடிப்படையில் இந்த குழந்தைகள் உடல் தோற்றம் அமையவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் அப்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் தாங்கள் குண்டாக இருப்பதாக கவலைப்படுவதாலும், அவர்கள் உடல் எடை மேலும் அதிகரிக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் குண்டாக இருப்பதற்கு காரணம், அவர்களின் உணவு, பழக்க வழக்க முறை தான் என்பதை உணர்ந்து, அவர்கள் விஷயத்தில் பெற்றோர்கள், அவர்களை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனோரீதியான பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் இருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மேற்கத்திய பாணி உணவு முறை, பழக்க வழக்கங்கள் புகுந்து வருவதால், குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தபாலில் வந்ததை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் கிரெடிட் கார்டுகளை திருடி நூதன முறையில் பல லட்சம் மோசடி கூரியர் நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் சிக்கினர்
Next post தப்பியோடிய கைதி பிடிபட்டார்