ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி: தரை இறங்கும்போது விபத்து

Read Time:1 Minute, 22 Second

Russia.flag.jpgரஷியாவுக்கு சொந்தமான “ஏர் பஸ்-310” சிபிர் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் உள்பட 200 பேர் இருந்தனர்.

விமானம் “சிர்குட்ஸ்” விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரை இறங்கும்போது திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடு பாதையில் ஓடி அங்குள்ள கான்கிரீட் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த விமானம் சுக்கு நூறாக நொறுங்கியது. பயங்கரமாக வெடித்து சிதறி அது தீப்பிடித்து எரிந்தது.

இதில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட 150 பேர் பலியாகி விட்டனர். காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மற்றவர்களை மீட்பு படையினர் மீட்டனர். விமானத்தில் எரிந்த தீயை அணைக்க 3 மணி நேரம் தீயணைப்பு படையினர் போராடினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடல் பிராந்தியத்துக்கு சர்வதேச நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
Next post 3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது