ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட் கையும் கரன்சியுமாக பிடிபட்டார்!!

Read Time:2 Minute, 18 Second

85e97162-a7bc-46cd-803f-6f31f87a42f9_S_secvpfகேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் நகரில் இன்று ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்த ஒருவர் வெடிப்பொருள் விற்பனை செய்ய லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்திருந்தார். இதை வழங்க அனுமதியளித்து கையொப்பமிட வேண்டிய மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராமச்சந்திரன், அந்த கடைக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் ஆலோசனையின்படி, இன்று காலை அந்நபர் கூடுதல் மாஜிஸ்திரேட் ராமச்சந்திரனின் இல்லத்துக்கு சென்றார். அவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த அதிகாரிகள் பாய்ந்துச் சென்று ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடமிருந்து லைசென்ஸ் வழங்குவதற்காக வாங்கிய லஞ்சப்பணம் ரூ.ஒரு லட்சம் மற்றும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரை சந்திப்பதற்காக 15 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வந்த மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டார். அந்தப் பணமும் ஏதோ காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக லஞ்சமாக தருவதற்கு கொண்டுவந்த பணமாக இருக்கலாம் என தெரிவித்த அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் விசாரித்து வருகின்றனர்.

கோழிக்கோட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!
Next post வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!