தேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..!!!

Read Time:1 Minute, 21 Second

downloadமருத்துவ உலகில் காலத்திற்கு காலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
கார்பன் நனோ துணிக்கைகளைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தேன் மற்றும் நுண் அலைகளைக் (Micro Wave) கொண்டு இந்த கார்பன் நனோ துணிக்கைகளை உருவாக்க முடியும் என அமெரிக்காவிலுள்ள Illinois பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு உருவாக்கப்படும் நனோ துணிக்கைகள் 8 நனோ மீற்றர்களை விடவும் குறைந்த அளவுடையதாக காணப்படுகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உடலின் எந்த பாகத்திற்கும் செலுத்தக்கூடியதாக இருக்கும் இந்த நனோ துணிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!
Next post பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரி அமெரிக்கா செல்ல கோர்ட் அனுமதி!!