கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!
தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் அம்பர்நாத் நகராட்சியில் உள்ள நெவாலி பகுதியில் வசித்து வரும் அப்பா பருலேகர், அதே பகுதியில் வசிக்கும் 30 வயதான இல்லத்தரசி ஒருவரை அவரது கணவர் மற்றும் மகனை கொன்று விடுவதாக மிரட்டி கடந்த ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் 4 பேருடன் நுழைந்த அந்த கொடூரன், இரும்புக் கம்பியால் அந்தப் பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளான். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.