2 முறை பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டரை பகல் முழுவதும் கோர்ட்டில் அமர வைத்த நீதிபதி!!

Read Time:3 Minute, 44 Second

76f864cf-3b47-4f1a-8172-77f71108ae44_S_secvpfகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி குமாரி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக ஜெயந்திகுமாரி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தினார். அப்போது அவர் ஜெயந்திகுமாரியை மிரட்டும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தி குமாரி குழித்துறை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டரை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இந்த நிலையில் ஜெயந்தி குமாரியின் வக்கீல் விபின் ஹெர்பர்ட் இதே வழக்கு தொடர்பாக கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது அவரிடம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீது வக்கீல் விபின் ஹெர்பர்ட் குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கிலும் இன்ஸ்பெக்டர் முத்துராமனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 2 முறை பிடிவாரண்டு பிறப்பித்தும் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் ஒரு விபத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் முத்துராமன் நேற்று குழித்துறை கோர்ட்டுக்கு சென்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிகரன், இன்ஸ்பெக்டர் முத்துராமனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதை அறிந்தார். இதனால் இன்ஸ்பெக்டர் முத்துராமனை கோர்ட்டில் அமரும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துராமன் பகல் முழுவதும் நீதிமன்ற அறையிலேயே அமர்ந்திருந்தார். இரவு 7 மணிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 2 வழக்குகளிலும் இன்ஸ்பெக்டர் முத்துராமனுக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இது தொடர்பான ஆவணங்களில் இன்ஸ்பெக்டர் கையெழுத்து போட்ட பிறகு அவர் கோர்ட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

மதியம் 12 மணிக்கு கோர்ட்டுக்கு வந்த அவர் இரவு 7 மணிக்கே வெளியே வந்தார். இதனால் குழித்துறை கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!
Next post கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர்!!