வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி!!

Read Time:1 Minute, 30 Second

d3847db9-51d2-43e0-935e-4e12be207a97_S_secvpfஉள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இணைய சமத்துவம் பற்றி விவாதங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு இணைய சமத்துவத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் குரல் அழைப்புகள், வீடியோ, படங்கள் போன்ற அனைத்து சேவைகளையும் சமமாக நடத்த வேண்டும். ‘வேகம் மற்றும் அனைவருக்கும் சேவை’ ஆகியவற்றில் பாகுபாடு இருக்க கூடாது என்பது இணைய சமத்துவத்தின் அடிப்படை.

தற்போது டேட்டா அடிப்படையில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்றவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக பொது மக்களிடம் கருத்துக்கேட்கப்படும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!
Next post பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!