டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்துடன் கண் தான உறுதிமொழிப் பத்திரம்: தமிழ்நாட்டின் வெற்றி முயற்சியை தத்தெடுக்கும் பஞ்சாப்!!

Read Time:1 Minute, 50 Second

36db3ec6-f2a6-467c-b34c-5e89665bc455_S_secvpfகண் தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுனர் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து சார்ந்த மரணம் நேரும்போது தங்களது கண்களை தானம் செய்ய விரும்புகின்றார்களா? என்ற கேள்வி தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து துறை ஆணையாளர் அலுவலகங்களில் அளிக்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பங்களில் இடம்பெற்றுள்ளன.

அவ்வாறு கண் தானம் அளிக்க முன்வரும் நபர்களுக்கு வழங்கப்படும் லைசென்ஸ்களில் அவர் கண் தானம் செய்ய உறுதிமொழி அளித்துள்ளார் என்ற தகவல் இடம்பெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்துடன் கண் தான உறுதிமொழிப் பத்திரங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் வினி மஹாஜன் இன்று தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கண்புரை நோயால் பார்வையிழந்து அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். இதைப்போன்ற விழிப்புணர்வின் மூலம் இவர்களில் பலருக்கு கண்ணொளியை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை!!
Next post பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!