18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து!!

Read Time:1 Minute, 25 Second

ca0583b2-8bb9-43e8-8eb6-726188fbb31b_S_secvpfபெங்களூருவில் விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர்.

பெங்களூருவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், லைசென்ஸ் இல்லாமல் சட்ட விரோதமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் ஓட்டி செல்லும்போது விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதனால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க, அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெங்களூருவில் விதிமுறைகளை மீறி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டியது தொடர்பாக 30–க்கும் மேற்பட்டோரின் பெற்றோர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வது சட்டப்படி குற்றமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!
Next post காணாமல் போன பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு!!