அசாமில் கொடூரம்: கால்நடை தீவனம் திருடியதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற பொதுமக்கள்!!

Read Time:1 Minute, 34 Second

f8f1dd3a-9099-4837-aaa7-1c78b8887e2c_S_secvpfஅசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தமது வாகனத்தில் கால்நடைத் தீவனங்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் சிலர் அந்த வாகனத்தை சிறைபிடித்து தீவனம் வாங்கியதற்கான ரசீதை தருமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் தீவனம் வாங்கியதற்கு உரிய ரசீதை பொதுமக்களிடம் அந்த இளைஞர் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இருப்பினும் ஆவேசம் குறையாத பொதுமக்கள் தீவன கடத்தலுக்கு பயன்படுத்தியாக கூறப்படும் அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் பெயர் ஜன்டி அலி என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடியைக் கவர்ந்த அதிசய கிராமம்: பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்க வீடுதோறும் பெயர்ப் பலகைகள்!!
Next post மதுரையில் பெண் தகராறில் வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை!!