வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: சகோதரர் புகார்!!

Read Time:4 Minute, 30 Second

b96da822-8205-448f-900d-e57c8bc6334f_S_secvpfகோவை காரமடை சஞ்சய் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி அஞ்சலிகுமாரி (வயது 29). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார்.

கார்த்திகேயனும், அஞ்சலிகுமாரியும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று காலை கார்த்திகேயன் வழக்கம்போல் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு சென்றதும் மனைவியிடம் இருந்து போன் வந்தது. ‘நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்’ என்று சொன்னதுடன் அஞ்சலிகுமாரி இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பின்னர் கார்த்திகேயன் தொடர்பு கொண்டபோது அஞ்சலிகுமாரி போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தனது நண்பருடன் வீட்டுக்கு வந்தார். முன்கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஞ்சலிகுமாரி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ரவிசங்கர், துடியலூர் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அஞ்சலிகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அஞ்சலிகுமாரியின் சகோதரர் சுகுமார் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது சகோதரியும், கார்த்திகேயனும் காதலித்து திருமணம் இருவரது வீட்டு சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டார். வரதட்சணையாக 50 பவுன் கேட்டனர். அவ்வளவு முடியாது என்று கூறி 30 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தோம்.

ஆரம்பத்தில் இருந்தே வரதட்சணை குறைவாக உள்ளதாக கார்த்திகேயன் குடும்பத்தினர் எனது சகோதரியை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். கூடுதல் வரதட்சணை கேட்டு எனது சகோதரியை சித்தரவதை செய்தனர்.

வேறு இடத்தில் திருமணம் செய்திருந்தால் 100 பவுன் நகையும், ஒரு காரும் கிடைத்திருக்கும் என்று குத்திக்காட்டி அவர் மனதை புண்படுத்தி வந்தனர். இந்நிலையில் கார்த்திகேயனும், அஞ்சலிகுமாரி தனிக்குடித்தனம் வந்தனர்.

கார்த்திகேயன் குடும்பத்தினர் அவரை கூடுதல் வரதட்சணை கேட்டுகும்படி வற்புறுத்தினர். அதன்பேரில் கார்த்திகேயனும் எனது சகோதரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் அஞ்சலிகுமாரி தற்கொலை செய்து கொண்டார் என்று கார்த்திகேயன் குடும்பத்தினர் கூறுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். இது குறித்து டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அஞ்சலிகுமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று இன்ஸ்பெக்டர் அமுதா தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது ஜவுளி கடையில் வேலை பார்த்த பவித்ரா!!
Next post கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!