ஆப்பக்கூடல் அருகே அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பரபரப்பு: கிராம மக்கள் பயபக்தியுடன் வணங்கினர்!!

Read Time:1 Minute, 28 Second

eac791cd-7d47-45bd-9da6-e3590d7532e4_S_secvpfஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40).

இவர் இரவில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார்.

அப்போது அம்மன் கோவில் எதிரே இருந்த அரசமரத்தை சக்திவேல் பார்த்தார். அப்போது மரத்தில் அம்மன் முகம் வடிவில் உருவம் தெரிவதை கண்டு திடுக்கிட்டார். உடனே இதுபற்றி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்தனர். அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த அரச மரத்தின் அருகில் இருந்து பார்த்தால் அம்மன் முகம் தெரிவதில்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி நின்று பார்த்தால் மட்டுமே அம்மன் முகம் மரத்தில் தெரிகிறது என்றும் மேலும் இரவு நேரத்தில் மட்டுமே அம்மன் உருவம் தெரிவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிந்ததால் அந்த மரத்தை பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!
Next post கோவை சரவணம்பட்டியில் மிட்டாய் கொடுத்து சிறுமியிடம் சில்மிஷம்: பெட்டிக்கடைக்காரர் கைது!!