மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் 9 ஆண்டுகள் கழித்து மரணம்!!

Read Time:2 Minute, 36 Second

3255ccaa-1ea6-4d15-9966-ad45f0b839e6_S_secvpfமும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்து, ஒன்பது ஆண்டுகள் கோமாவில் இருந்த பராக் சாவந்த் இன்று காலமானார்.

2006ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் சர்ச்கேட்-விரார் ரெயிலில் சாவந்த் பயணம் செய்தபோது குண்டு வெடித்ததில் அவரது தலையில் பலமாக அடிப்பட்டது. உடனடியாக அவர் பக்திவேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பி.டி. ஹிந்துஜா மருத்துவமனைக்கு மாற்றினர்.

குண்டு வெடிப்பில் பிழைத்த வெகு சிலரில் சாவந்த் முக்கியமானவர். இவரது மனைவி பிரீத்திக்கு இந்திய ரெயில்வேயில் வேலை வழங்கப்பட்டது. சாவந்துக்கு பிரனிதி(8) என்ற மகள் உள்ளார். இவர் கோமா நிலையில் இருக்கும்போது மகள் பிறந்ததால் பிரனிதியை பார்க்கவேயில்லை. 2008-இல் சிறிது நேரம் நினைவு திரும்பியபோது, முன்னான் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இவரை சந்தித்தனர்.

சாவந்த் இறந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாக பா.ஜனதா எம்.பி. கிரித் சோமையா தெரிவித்தார்.

மும்பை புறநகர் ரெயில் சேவையை முடக்கும் வகையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, 11 நிமிடங்கள் தொடர்ந்தது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் மாலை நேரத்தில் பிரஷர் குக்கரில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறின.

மும்பையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பில், 209 பேர் பலியாகினர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பியாந்தர், போரிவலி, ஜோகேஷ்வரி, கார் சாலை, பாந்த்ரா, மஹிம் மற்றும் மாதுங்கா சாலை பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. போரிவலி பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post MSVயின் நிலை கவலைக்கிடம் – டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!
Next post கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் அடித்து கொடுமைப்படுத்தியதாக தாசில்தார் மீது போலீசில் மனைவி புகார்!!