1ம் இடம் மனைவிக்கு இல்லை – தோனி சொல்லும் உண்மைக்கதை!!

Read Time:2 Minute, 30 Second

dhoniஇந்திய அணிக்கு கிடைத்த ஒரு மகத்தான பொக்கிஷம் மகேந்திரசிங் தோனி.

2007 டி20 உலகக் கிண்ணம், 2008 விபி முத்தரப்பு தொடர் (அவுஸ்திரேலியா), 2011 உலகக் கிண்ணம் என்று பல கிண்ணங்களை கைப்பற்றிய தோனியின் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தான் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுவாரஸ்யமான சங்கதிகள்:

“அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிராவிட்தான் என்னுடைய ஹீரோக்கள். டிராவிட்தான் எனக்கு பொறுமையை கற்றுக்கொடுத்தவர். மது கொஞ்சம் சுவையானது என்று தெரியும். அதனால்தான் நான் மதுவை தொடுவதே இல்லை. அதேநேரம் மற்றவர்கள் அதை அனுபவிப்பதை புரிந்து கொள்கிறேன்.”

அதிவேக பைக்குகளின் காதலன் தோனி என்பது நமக்கு தெரியும். ஆனால் அவரிடம் ஒரு சைக்கிள் இருப்பது தெரியுமா?

“காஸ்ட்லி, சீப், பழசு, புதுசு என்று எனக்கு எல்லாவற்றையுமே பிடிக்கும். டுகாட்டி பண்டா, ஹார்லே பேட் பாய், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதிவேக பைக்கான ஹெல்கேட், 2 ஸ்ட்ரோக் என்ஜின் கொண்ட பழைய பைக்குகள் ஏன் பழைய பிஎஸ்ஏ சைக்கிள் கூட என்னிடம் உள்ளது.”

இந்த சந்திப்பின் இறுதியில், தன்னுடைய வாழ்வின் சிறப்பான தருணம் கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் என்று கூறிய தோனி தான் வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களில் மனைவிக்கு 3-வது இடம் என்றும் பெற்றோருக்கு 2-வது இடம் என்றும் தெரிவித்தார். முதல் இடம் யாருக்கு தெரியுமா? தாய்நாட்டுக்கு…….. தோனிடா!!!!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய பாதையை நோக்கி தமிழர் உரிமைப் பயணம்…. -ஸ்ரீ பரராஜசேகரன் (கட்டுரை)!!
Next post மாதுளையின் மருத்துவக் குணங்கள்..!!!