ரிசர்வ் வங்கி கவர்னரையே கேள்வி கேட்டு மடக்கிய 8-ம் வகுப்பு மாணவன்: வைரல் வீடியோ!!

Read Time:2 Minute, 26 Second

e5c60eea-2902-44d6-9e34-fc949bfcad11_S_secvpfதனது கொள்கை உத்திகள் மற்றும் பொருளாதார கணிப்புகளுக்காக வெகுவாக அறியப்படும் பொருளாதார நிபுணரான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கேள்வி கேட்டு மடக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த வாரம் மும்பையில் பள்ளிக் குழந்தைகளுடனான சந்திப்பு ஒன்றில் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். கேள்வி நேரத்தின் போது தன்னை ராஜாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு சிறுவன், ரூபாய் மதிப்பு ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது. ரூபாயின் மதிப்பு குறித்த பெடரல் திட்டத்தை நீக்குவது குறித்து அமெரிக்கா யோசித்து வருவதாக வந்த வதந்தி ஒன்று உள்ளது, எப்போது இந்தியா அமெரிக்காவைப் போன்று மற்ற நாடுகளை பாதிக்கும் வலுவான கொள்கைகளை உருவாக்கப் போகிறது? என்று கேட்டான்.

அவன் கேள்வி கேட்டு முடித்த நொடி அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. ரகுராம் உட்பட அனைவருமே ஒரு கணம் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் நிலைமையை புரிந்து கொண்டு ரகுராம் பதிலளிக்கையில், “உண்மையில் ஒரு நாட்டின் பொருளாதார கொள்கை உலக நாடுகளை பாதிப்பது மகிழ்ச்சியான விஷயம் கிடையாது. அமெரிக்கா ஒரு முடிவெடுக்கும் போது உலக நாடுகளில் அது ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து யோசிக்க வேண்டும். ராஜாசுக்கு என்னுடைய வயது ஆகும் போது இந்தியா நிச்சயம் இந்திய பொருளாதாரத்தில் தலைசிறந்த 2 அல்லது 3 நாடுகளில் ஒன்றாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

2 லட்சம் பேரைக் கடந்து தீயாய் பரவும் அந்த வைரல் வீடியோ:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம்!!
Next post நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால்!!