தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: கல்லூரி மாணவி மனு!!

Read Time:4 Minute, 8 Second

541120ad-de82-4e38-a711-3e4e90cae759_S_secvpfஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கார்த்திகா (வயது 19) கல்லூரி மாணவி. இவருக்கும் இவரது மாமா மகன் பிரபாகரனுக்கும் (25) காதல் ஏற்பட்டது. பிரபாரன் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். காதலர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா காதலனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தங்கமணி கொடுமுடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் ஆகாமல் கார்த்திகாவுக்கு குழந்தை பிறந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி விசாரித்த போது வாலிபர் பிரபாகரன் தான் காரணம் என தெரிய வந்தது. காதலன் பிரபாகரன் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கைவிட்டதால் மனவேதனை அடைந்தார்.

இதனால் கார்த்திகா தனது ஆண் குழந்தையை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தில் ஒப்படைத்தார். இதன் பின்னர் காதலன் பிரபாகரன் வீட்டுக்கு கார்த்திகா சென்றார். அப்போது பிரபாகரனின் பெற்றோர், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து மாணவி கார்த்திகா ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

என்னை காதலித்து உறவினர் பிரபாகரன் ஏமாற்றி விட்டார். அவர் மூலம் பிறந்த ஆண் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து விட்டேன். என்னை ஏமாற்றிய பிரபாகரன் மற்றும் அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வாலிபர் பிரபாகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும் படி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு கார்த்திகா கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அரசு விதிகளின் படி தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தையை தாய் கார்த்திகாவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த வாரம் கல்லூரி மாணவி கார்த்திகாவிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமுதி அருகே விவசாயி வெட்டிக்கொலை: மகன் ஆத்திரம்!!
Next post கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…!!