அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்

Read Time:3 Minute, 30 Second

Discovery.3.jpgஅமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் விண்ணில் மிதக்கப்படவிட்டு உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அது பூமிக்கு திரும்பிய பிறகு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு மீண்டும் விண்கலம் அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் போது அதில் இந்திய வீராங்கனையான சுனிதா வில்லியம்சும் அனுப்பப்படுகிறார். சுனிதா, விண்வெளிக்கு அனுப்பப்படும் 2-வது இந்தியப்பெண் ஆவார்.

ஏற்கனவே இந்திய பெண் கல்பனா சாவ்லா விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்து அவர் திரும்பும் போது கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறி அவர் இறந்து போனார். இந்த சம்பவம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி நடந்தது.

விண்வெளி பயணத்துக்கு அமெரிக்க நாசா நிறுவனம் சுனிதாவை தேர்ந்து எடுத்து உள்ளது. அவருடன் ரஷிய விண்வெளி வீரர் மிக்கையில் டைïரின், அல்ஜீரியாவை சேர்ந்த மிச்சேல் லோபஸ் ஆகியோரும் அந்த விண்கலத்தில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின் போது சுனிதா விமான என்ஜினீயராக இருப்பார். சுனிதா மாற்று வீராங்கனையாக 2003-ம் ஆண்டு நாசாவால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்தியாவில் பிறந்த டாக்டரான தீபக் பாண்ட்யாவின் மகளான சுனிதா அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் ïக்கிளிட் என்ற இடத்தில் 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிறந்தார். தீபக் 1960 களில் அமெரிக்காவில் குடியேறினார். அவரது மனைவி ஊர்சலின் ஒரு அமெரிக்க பெண் ஆவார். அவர் ஒரு குடும்ப தலைவி. சுனிதாவின் கணவர் பெயர் மைக்கேல் ஜே.வில்லியம்ஸ். அவர் ஒரு அமெரிக்கர்.

41 வயதான இவர் விமானியாக ஒரு போதும் விரும்பியது கிடையாது. அவரது இளம் வயது கனவு கால்நடை டாக்டராக வருவதுதான். காலப்போக்கில் இந்த கனவு மாறி விட்டது.

1993-ம் ஆண்டு இவர் விமானிகள் பள்ளியில் சேர்ந்ததும் அவர் கனவும், லட்சியமும் திசை மாறி விட்டது. 1987-ம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். பிறகு ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டு ஹெலிகாப்டர் படையில் சேர்ந்தார். விமானம் ஓட்டுவதில் அவருக்கு இருந்த திறமையே அவருக்கு விண்வெளி வீராங்கனை ஆவதற்கான வாய்ப்பை வாரி வழங்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’
Next post 4-வது முறையாக உலக கோப்பை: இத்தாலியில் கோலாகல கொண்டாட்டம்