சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 32 Second

0cb418cf-4168-4dac-a840-95aafc72ffac_S_secvpfசிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கருத்தன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர்களுடைய மகன் வினோத் கண்ணன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர், மாதந்தோறும் வீட்டுச் செலவிற்காக செல்வியின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில் செல்வியின் ஏ.டி.எம். கார்டு திருட்டுப் போனது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.91 ஆயிரம் மாயமாகி இருந்தது.

இது குறித்து செல்வி மதகுப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, செல்வியின் உறவினர், குணசேகரன் என்பவர், செல்வியின் ஏ.டி.எம். கார்டை திருடி, அதன்மூலம் ரூ.91 ஆயிரம் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதற்கு குணசேகரனின் மனைவி புனிதவள்ளி, அதே பகுதியை சேர்ந்த பழனி ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குணசேகரன், பழனி ஆகியோரை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர். தலைமறைவான புனித வள்ளியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமங்கலம் அருகே ராணுவ வீரர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டியது அம்பலம்!!
Next post உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?