துர்க்மெனிஸ்தான் தலைநகரில் யோகா மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!!

Read Time:2 Minute, 9 Second

cfa6a126-9c11-4677-853a-e2e2a522a819_S_secvpfதுர்க்மெனிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகர் அஷ்கபட்டில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார்.

தலைநகர் அஷ்கபட்டில், மகாத்மா காந்தியின் உருவச் சிலையை திறந்து வைத்த மோடி அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி, திறப்பு விழாவில் யோகா செய்து காட்டிய மாணவர்களின் யோகாவுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன் என்று பாராட்டினார். மேலும் யோகாவின் சிறப்பம்சங்கள் பற்றியும், யோகா பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் அவர் உரையாற்றினார்.

முன்னதாக அந்நாட்டு அதிபர் குர்பங்குலியை இன்று சந்தித்துப் பேசிய மோடி, துர்க்மெனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை துர்க்மெனிஸ்தான் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, வெளியுறவு, அறிவியல் தொழில்நுட்பம், மருந்தியல், ரசாயன வினியோகம், விளையாட்டு, சுற்றுலா ஆகிய துறைகளில் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!
Next post மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!