போன் செய்து ஆபாச பேச்சு: பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மேலும் ஒரு மாணவி புகார்!!

Read Time:4 Minute, 42 Second

d897b288-8559-41e9-9221-57e1e9200aa3_S_secvpfகோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் சரவண செல்வன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆராய்ச்சி படிப்பு மாணவி போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் புகார் அளித்து பரபரப்புக்கு உள்ளாக்கினார். பேராசிரியருக்கு ஆதரவாக ஒரு தரப்பு மாணவர்களும், பேராசிரியருக்கு எதிராக மற்றொரு தரப்பு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று மீண்டும் அதே பேராசிரியர் உள்பட சிலர் மீது மேலும் ஒரு ஆராய்ச்சி பட்டப்படிப்பு மாணவியான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த எல்சமா சபாஸ்டின் (வயது 52) என்பவர் கலெக்டரிடம் புகார் அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் பாரதியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2009–ம் ஆண்டு ஆங்கிலத் துறையில் பி.எச்.டி. பட்டப் படிப்புக்காக சேர்ந்தேன். முறையாக அனைத்து படிப்புகளையும் நிறைவு செய்து 7 வருட படிப்பு முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 27–ந் தேதி பட்டம் பெறுவதற்கான செமினார் நடைபெற்றது.

இதற்காக அப்சர்வர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் உள்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுத்து இருந்தேன். இந்த நிலையில் அப்சர்வர் பேராசிரியர் செமினாருக்கு நான் வரவேண்டும் என்றால் எனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும். இந்த பணத்தில் துறைத்தலைவர் மற்றும் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது என்று கூறி மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இதையடுத்து எனது செமினாருக்காக வேறு அப்சர்வர் நியமிக்கப்பட்டார்.

அவர் முன்பு நான் செமினார் நடத்தினேன். அதன் பின்னர் நான் சிறப்பாக செய்ததாக பாராட்டி நான் பாஸ் செய்து விட்டதாக சர்ட்டிபிக்கேட் அளித்தனர். அதன் பின்னர் புரபொசனல் சர்ட்டிபிக்கேட்டுக்காக காத்திருந்தேன். ஆனால் அவை எனக்கு வரவில்லை.

இதுகுறித்து துறை அதிகாரிகளை அணுகியபோது நான் செமினாரில் சரியாக செயல்படவில்லை, எனவே மீண்டும் தேர்வு உள்ளது என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவர்களிடம் பாஸ் ஆனதாக சர்ட்டிபிக்கேட் வழங்கப்பட்டு உள்ளது குறித்து கேட்டபோது மழுப்பினர். பின்னர் என்னை முதலில் எனது தேர்வுக்காக நியமிக்கப்பட்டு இருந்த அப்சர்வர் செல்போனில் தொடர்பு கொண்டு நான் சொல்லாமல் உனக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்க மாட்டார்கள். நான் கூறியபடி ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நான் சொல்லும் இடத்துக்கு தனியாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஒரு பெண் என்றும் பாராமல் இரவு நேரத்தில் போன் செய்து ஆபாசமாக பேசத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகளை எனக்கு சொல்லவே வெட்கமாக உள்ளது. அந்த அளவுக்கு என்னை தொல்லை செய்தார்.

மேலும் ஆராய்ச்சி பட்டப்படிப்பை நிறைவு செய்ய அவர்கள் கூறியபடி நடக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு துறைத்தலைவர் உள்பட சிலர் ஆதரவாக இருந்தனர். எனவே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது ஆராய்ச்சி படிப்பு சான்றிதழை பெற்றுதர வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீரங்கத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!
Next post பெண் கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் விடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்: மீண்டும் சிறையில் அடைப்பு!!