இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்!!
இலங்கையர்கள் என்று சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத குழுவொன்றினால் இந்திய மீனவர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிறன்று கொடியற்கரை கடற்பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான இந்திய மீனவர்கள் நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடற்றொழில் அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் இலங்கையர்கள் என்று அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய வள்ளங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.