சுவிஸில்: குற்றவாளிகளில் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்!!

Read Time:1 Minute, 30 Second

aniswisspolizei.gifகடந்த ஆண்டு நாடு தழுவியரீதியிலான புள்ளிவிபரங்களின்படி நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 49 வீதத்தினர் அதாவது கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்கள் என்று சுவிஸ் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வதிகரிப்பு வீதத்தில் கூடுதலான இடத்தை பிடித்திருப்பது போக்குவரத்து குற்றங்களாகும். போக்குவரத்து குற்றங்கள் 8 வீதத்தாலும், போதை மருந்துகளை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோரின் தொகை 6 வீதத்தாலும் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. மொத்த குற்றங்களில் 54 வீதமானவை போக்குவரத்து குற்றங்களாகும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. பொதுவான குற்றவாளிகளில் 86 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் 30 வீதமானவர்கள் 26 – 40 வயதிற்க்குட்பட்டவர்கள் என்றும், 26 வீதமானவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் காட்டிநிற்கும் புள்ளிவிபரங்கள் அதில் 49 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post அரண்மனை குடும்பத்திடம் `செக்ஸ் – போதை’ பிளாக்மெயில்! : 100 ஆண்டில் முதன் முறையாக பகீர்!!