By 11 July 2006

ரஷியாவில் 600 பேரை கொன்று குவித்த பயங்கர தீவிரவாதி குண்டுவெடிப்பில் பலி

Russia.flag.jpgரஷியா நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர்கள் செசன்யா தீவிரவாதிகள். தனி நாடு கேட்டு தீவிரவாத செயல் களில் ஈடுபட்டு வரும் இவர்கள் அடிக்கடி ரஷியாவுக்குள் குண்டுவெடிப்புகளை நடத்து கிறார்கள். செசன்யாவில் போட்டி அரசாங்கம் நடத்தி வரும் செசன்யா தீவிரவாதிகள் லாரிகளில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்து ராணுவ நிலைகளை தகர்ப்பதுண்டு. இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை செசன்யா தீவிரவாதிகளின் தலைவன் ஷமில் பசயி முன்னின்று நடத்துவதுண்டு.

ஷமில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ரஷியாவில் நிறைய குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கிறான். பொது மக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து பிறகு அவர்களை கொன்று விடுவதுண்டு. அந்த வகையில் இவன் 600-க்கும் மேற்பட் டோரை கொன்று குவித்து இருக்கிறான்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு பெஸ்லன் நகரில் பள்ளிக்குள் புகுந்து இவன் நூற்றுக்கணக் கான மாணவ-மாணவிகளை சிறை பிடித்தான். அப்போது ஏற்பட்ட மோதலில் 371 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக துப்பாக்கி குண்டுக்கு இரையானார்கள்.

பொதுமக்களை ஈவு இரக்க மின்றி கொல்லும் ஷமில் சமீபத்தில்தான் செசன்யா தீவிரவாத பகுதிகளின் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றான். தலைவனாக இருந்த அப்துல் காலிம் 3 வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்டான். இதையடுத்து புதிய தலைவனாக டோகு பதறி ஏற்றான்.

அவன் ஷமிலை துணைத்தலைவனாக நியமித்தான். இந்த பொறுப்புக்குப் பிறகு ரஷியாவில் மாபெரும் வெடி குண்டு தாக்குதலை நடத்த ஷமில் திட்டமிட்டான். செசன்யா மாகாண எல்லை அருகில் உள்ள இன்குஷிதியா நகரிலும், ரஷியாவின் முக்கியப் பகுதிகளிலும் குண்டு வெடிப்பை நடத்த அவன் ஏற்பாடு செய்து இருந்தான்.

ரஷியாவில் வரும் 15-ந் தேதி (சனிக்கிழமை) ஜி-8 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. புனித பீட்டர்ஸ் பர்க்கில் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் மாஸ்கோவில் இருக்கும் போதோ, அல்லது அதற்கு முன்பாகவோ மிகப் பெரிய நாசவேலையை நடத்த செசன்யா தீவிரவாதிகள் தலைவன் ஷமில் சதித்திட்டம் தீட்டி இருந்தான். இந்த நாச வேலை மூலம் உலக நாடுகளி டையே ரஷியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்க அவன் நினைத்திருந்தான்.

சதித்திட்டத்தை நிறைவேற்று வதற்காக நேற்று அதிகாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியுடன் ஷமில் புறப்பட்டான். லாரிக்கு பின்பக்கமாக வந்த 3 கார்களில் ஒன்றில் அவன் அமர்ந்து இருந்தான். வெடிகுண்டு லாரியை மக்கள் திரளும் இடத்தில் மோத செய்து ஆயிரக்கணக்கில் உயிரிழப்பை ஏற்படுத்த அவன் நினைத்திருந்தான்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த லாரி வரும் வழியிலேயே வெடித்து சிதறியது. இன்குஷி தியா நகர் அருகில் உள்ள இகஷிவோ என்னும் கிராமத் தில் வந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு லாரி வெடித்தது. இதில் அந்த லாரி யும், அதை பின் தொடர்ந்து வந்த 3 கார்களும் தூள், தூளாக நொறுங்கின.

தீவிரவாதி ஷமில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானான். அவனுடன் வந்த 20-க்கும் மேற்பட்ட தீவிரவாதி களும் உயிரிழந்தனர். ஷமில் பலியானதை செசன்யா தீவிரவாதிகளும் உறுதி செய்தனர்.

ரஷிய பாதுகாப்பு படை தலைவர் அலெக்சாண்டர் இது பற்றி கூறுகையில், “ஷமில் வெடிகுண்டு லாரியுடன் வருவது ரகசிய படை மூலம் எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் முற்றுகையிட்டதால் குண்டுகளை வெடிக்க செய்து அவன் செத்து விட்டான்” என்றார்.

ஆனால் இதை செசன்யா தீவிரவாதிகள் மறுத்துள்ள னர். வெடிகுண்டு லாரி எதிர் பாராதவிதமாக வெடித்து விட்டதால் ஷமில் இறந்ததாக கூறி உள்ளனர்.

ஷமில் பலியானது ரஷிய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பெஸ்லனில் கொல்லப்பட்ட பள்ளி குழந்தைகளின் சாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி இது என்றும் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஷமில் தன் இயக்கத்துக்கு அல்-கொய்தா உதவியுடன் ஆயுதங்களை பெற்று வந்தான். அவன் செத்து விட்டதால் செசன்யா தீவிரவாத இயக்கத்துக்கு மாபெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.Comments are closed.