By 1 November 2007

முல்லைத்தீவு விமானத் தாக்குதலில் இருவர் படுகாயம்; வீடுகள் சேதம்

முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரைப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இருபொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சஞ்சீவன் (வயது 20),ரூபன் (வயது 20) ஆகியோரே காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் வீடுகள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமடைந்துள்ளன. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர வீடமைக்கும் வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.



Comments are closed.