பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!!

Read Time:1 Minute, 48 Second

6fddd6c4-2da4-471d-a08a-753d11f35453_S_secvpfபாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சல் அடைந்து சில நேரங்களில் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டால், அவர்களது நிலைமை பரிதாபம் தான். சமூகத்தின் அவலப்பார்வையால் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

அதன்படி பணிக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டால், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்வாறு அளிக்கப்படும் விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!
Next post மகள் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை விடுதலை!!