செம்மரக்கடத்தலில் கணவர் கைது: மகளிர் சுய உதவிக்குழு தலைவி–மகள் விஷம் குடித்து தற்கொலை!!

Read Time:6 Minute, 9 Second

83467093-edef-4e3d-91af-867895f046fe_S_secvpfசென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 46). இவரது மனைவி அமுதா (39). மகளிர் சுய உதவிக்குழு தலைவி. இவரது மகள் பிரீத்தி என்கிற வான்மதி (19). இவர் சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

ராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் பரிசல் மூலம் கர்நாடக மாநில எல்லையான மாறு கொட்டாய் மணல் திட்டு பகுதிக்கு சென்றனர்.

அங்கு இறங்கியவுடன் பரிசல் ஓட்டியை அனுப்பி விட்டு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது 3 பேரும் விஷம் கலந்த ஜூஸ் குடித்தனர். இதனால் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

அந்த சமயம் காவிரி ஆற்றில் சென்ற பரிசல் ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் காவிரி கரையோரம் 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். விஷம் குடித்த அமுதா இறந்து கிடந்தார். ராஜனும், மகள் பிரீத்தியும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மாறுகொட்டாய் பகுதிக்கு சென்று பரிசல் ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் 2 பேரையும் மீட்டு ஒகேனக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிரீத்தி இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். ராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷம் குடித்து தற்கொலை செய்த அமுதாவின் உடலை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் 3 பேரும் மயங்கி கிடந்த இடத்தில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. கடன் பிரச்சினையால் அவமானம் தாங்க முடியாத காரணத்தால் மருந்து குடித்து இறந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று எழுதப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் 3 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

மகளிர் சுய உதவிகுழு தலைவி அமுதாவின் கணவர் ராஜனின் சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். இவர் குடும்பத்துடன் சென்னை சென்று திருவேற்காடு பகுதியில் குடும்பம் நடத்தினார். டிரைவர் வேலை பார்த்த இவர் பின்னர் காண்டிராக்டு தொழில் செய்தார். செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் இவர் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி அமுதா சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் பலருக்கு பாங்கிகளில் கடன் வாங்கி கொடுத்தார். கடன் வாங்கிய பெண்கள் அந்த கடனை திருப்பிக் கட்டவில்லை. இதனால் பணத்தை கட்டச் சொல்லி பாங்கி அதிகாரி ஒருவர் அடிக்கடி அமுதாவை தொடர்பு கொண்டு மிரட்டி வந்ததாகவும், இதனால் அமுதா குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்ததாகவும் அமுதாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதனால் மிரட்டிய பாங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமுதா செல்போனை ஒகேனக்கல் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவரை தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்– யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.

அமுதாவும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த அவரது உறவினர்கள் ஓசூர், நாகர்கோவில் மற்றும் சென்னையில் இருந்து தர்மபுரி வந்து உள்ளனர். அவர்கள் 2 பேரின் பிணத்தை பார்த்து கதறி அழுததது பரிதாபமாக இருந்தது.

ஒகேனக்கல் அருகே மணல்திட்டு பகுதியில் இந்த தற்கொலை சம்பவம் நடந்து இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒகேனக்கல் போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். என்றாலும் இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்காக மாதேஸ்வரன் மலை போலீசார் இன்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வர உள்ளனர். அவர்கள் வந்த பிறகு தான் அமுதாவின் உறவினர்களிடம் புகார் மனு வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள். அவர்களிடம் அமுதாவின் செல்போனை ஒகேனக்கல் போலீசார் ஒப்படைப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 14 சிறுவர்கள் தப்பி ஓட்டம்!!
Next post மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயம்!!