அரியவகை பறவைகளை சுட்டது ஏன்?: இங்கிலாந்து இளவரசரிடம் போலீசார் விசாரணை

Read Time:1 Minute, 46 Second

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அரச குடும்பத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் அரிய வகைப்பறவைகளை வேட்டையாடினார். இதுபற்றி வந்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இளவரசர் ஹாரி தன் நண்பர் ஒருவருடன் நார்போல்க் என்ற இடத்தில் உள்ள சன்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு சென்றார். அங்கு அவர் தன் நண்பருடன் சேர்ந்து வேட்டையில் ஈடுபட்டார். அவர் அரிய வகைப்பறவைகளை அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அரச குடும்பத்துக்கு சொந்தமான எஸ்டேட்டில் இருந்து அரியவகை பறவைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை இயற்கை பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் பார்த்து விட்டனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக இளவரசரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது நான் பறவைகளை வேட்டையாடவில்லை. பறவைகளை சுட்டுக்கொன்றது யார் என்று தெரியாது என்று இளவரசர் ஹாரி கூறினார். அரியவகை பறவைகளை சுட்டுக் கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!
Next post இங்கிலாந்தில் சவுதி அரேபியா மன்னர்