கழிவகற்றல் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு!!

Read Time:5 Minute, 40 Second

1020945722heபல தசாப்தங்களாக தீர்வின்றி சுற்றாடலுக்கு பெரும் சவாலாக இருந்துவரும் குப்பை மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு முறையான தேசிய செயற்திட்டம் ஒன்றினூடாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக இன்று (21) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கழிவுப் பிரச்சினை இன்று மக்களின் சுகாதாரத்திற்கு பெறும் அச்சுறுத்தலாhக இருந்துவருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு செயற்திட்டத்தினூடாக சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தபோதும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது என்பதோடு, மக்களுக்கு அறிவூட்டி அரசாங்கத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு எல்லா அதிகாரிகளும் அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க நிறுவனங்களும் தனியார்த்;துறையினரும் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் சுற்றாடல் அதிகாரசபையினூடாக தற்போது நடைமுறைப்பத்தப்படும் திட்டங்களைப் பலப்படுத்தியும் நடைமுறைச்சாத்தியமான புதிய திட்டங்களினூடாகவும் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கழிவுப் பிரச்சினையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசிங்களில் வசிக்கும் மக்களாவர் என்றும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வனவளங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் கடலோரப்பிரதேசங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி அவர்களினால் முன்னுரிமை அளிக்கப்படும் ஒரு செயற்திட்டமாக சூழல் பாதுகாப்பு செயற்திட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சூழல் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து நடைமுறைச் சாத்தியமான சூழல் பாதுகாப்பு நடடிவக்கைகளுக்காக திட்டமொன்றை வடிவமைக்கும் செயற்பாடுகள் தற்போது ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காட்டு வளங்கள் குறைந்து செல்வது, காடழிப்பு, சூழல் மற்றும் இயற்கை வளங்களை சேதப்படுத்தல், சூழல் துஷ்பிரயோகம் போன்ற இன்னும் இது தொடர்பான பல்வேறு விடயங்கள் முக்கிய சூழல் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அப்பிரச்சினைகளுக்காக தீர்வுகளைக் கண்டறிவதற்கு இப்புதிய திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு 7500 தொன் குப்பைகள் கொட்டப்படுவதுடன் அவற்றில் 1000 தொன் குப்பைகள் மாத்திரமே முகாமைத்துவம் செய்யப்படுகிறது. முகாமைத்துவம் செய்யப்படாது விடப்படும் எஞ்சிய 6500 தொன் குப்பைகளை தொழிநுட்ப உதவியுடன் முறையாக முகாமைத்துவம் செய்யவும் எதிர்;பார்க்கப்படுகிறது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் நீர் மற்றும் வாயு துஷ்பிரயோகம் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கும் இத்திட்டத்தினூடாக தீர்வு காணப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ பி அபேகோன் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிதம்பரம் அருகே விடுதியில் தங்கி படித்த 6–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!
Next post விபத்தில் மூவர் பலி – 10 பேர் காயம்!!