நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்!!

Read Time:2 Minute, 53 Second

739535587UNPநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“60 மாதங்களில் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஐந்து திட்டங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிடும் நிகழ்வு இன்று காலை விகாரமகா தேவி பூங்காவின் திறந்தவௌி அரங்கில் இடம்பெற்றது.

அந்த விஞ்ஞாபனத்தில் ஐந்து திட்டங்கள் உள்ளடங்கி இருப்பதுடன், சர்வமத தலைவர்களுக்கு வழங்கி விஞ்ஞாபனம் வௌியிட்டு வைக்கப்பட்டது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், ஊழலை இல்லாதொழித்தல், சுதந்திரத்தை உறுதி செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு மற்றும் கல்வியறிவை மேம்படுத்துதல் போன்ற ஐந்து வகையான திட்டங்கள் உள்ளடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பிரதமர்,

தனக்கு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது எனது நோக்கம் அல்ல எனவும் உங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

ஜனவரி 08ம் திகதி ஏற்பட்ட புரட்சியின் கீழ் முன்னெடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆகஸ்ட் 17ம் திகதி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மாதுலுவாவே சோபித தேரர், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மனோகணேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட மாகாண சபையில் சிவாஜிலிங்கம் குழப்பம்!!
Next post ஐதேக தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு ஐமசுமு, ததேகூ அடுத்த வாரம்!!