தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது!!

Read Time:2 Minute, 23 Second

2076675808El Depதேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 506 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் நியமனங்கள் வழங்குதல் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குதல் தொடர்பானது என அந்தப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதனுடன் தேர்தல் சட்டங்களை மீறி போஸ்டர்கள் மற்றும் பதாதைகளை ஒட்டுதல், பொருட்களை விநியோகித்தல் தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 78 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் பதுளை மாவட்டத்தில் 36 முறைப்பாடுகளும் குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 28 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன – ரவி!!
Next post சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..!!