இந்திய அணியை வீழ்த்த யுவராஜ் சிங்கை குறி வைப்போம்: பாக். கேப்டன் சோயிப் மாலிக் பேட்டி

Read Time:2 Minute, 44 Second

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய ணம் செய்கிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 ஒருநாள் போட்டி 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற 5-ந்தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தனர். கேப்டன் சோயிப் மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அணி சமீப கால மாக பல வெற்றிகளை குவித்து உள்ளது. இருந்தாலும் இரு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணியாக நான் கருது கிறேன்.இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அதன் பலம் அதிகமாக இருக் கும். இருந்தாலும் இந்திய சூழ்நிலை, மைதானம் எல்லாம் எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே நாங்களும் திறமை யாக ஆடுவோம். இந்திய வீரர்கள் தெண்டுல்கர், கங்குலி, ஷேவாக் போன்றவர்கள் மிக திறமையானவர்கள் தற்போது யுவராஜ் சிங் நல்ல பார்மில் இருக்கிறார். அபாயகரமான மனிதர். எனவே அவரை குறி வைத்தே எங்கள் விïகங்கள் இருக்கும்.

இரு அணியிலுமே இளம் வீரர்கள் அதிகம் பேர் இருக் கிறார்கள். இது அணிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எங்கள் அணிக்கு அக்தர் மீண்டும் வந்து இருப்பது கூடுதல் பலத்தை தந்துள் ளது.

இப்போது எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இந்திய வீரர்களும், ரசிகர்களும் எங்களுக்கு எப்போதுமே முழு ஒத்துழைப்பு கொடுப்பார் கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் பந்து வீச்சா ளர் கனேரியா கூறும்போது, “தெண்டுல்கர் இப்போதும் மிகச்சிறந்த வீரராகவே உள் ளார். அவரை எந்த சூழ்நிலை யிலும் குறைத்து மதிப்பிட முடியாது. காம்பீர், உத்தப்பா போன்ற இளம் வீரர்கள் துடிப்பாக ஆடி வருகின்றனர். யுவராஜ் சிங் ஆட்டமும் பிர மாண்டமாக இருக்கிறது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மணிரத்தினம் படம்:மறைமுக தூண்டில் போட்ட ஸ்ரேயா!
Next post 21 கரும்புலிகளை பலி கொடுத்தும் சிறீலங்கா வன்படையின் தாக்குதலில் இருந்து தமிழ்ச்செல்வனைக் காப்பாற்ற முடியாத பிரபாகரன்!