தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரணில் வாக்குறுதி!!

Read Time:2 Minute, 9 Second

41509762ranilஇலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் தலைநகரான நுவரேலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூ;ட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய துறையினர் போன்று தோட்டத்துறையினருக்கும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று ரணில் கூறினார்.

மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை பாராளுமன்ற தேர்தல் காரணமாக தற்போது தடைப்பட்டுள்ளது.

தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையொன்றின் காரணமாக இலங்கையிலிருந்து மீண்டும் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அதற்கான நடிவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தனது உரையில் ரணில் குறிப்பிட்டார்.

தோட்ட மக்களுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றும் 10 வருடங்களுக்கு மேலாக அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உரிமைகளும் வழங்கப்படும் என்றும் பிரதம கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!!
Next post விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!