மன்மோகனுடன் பெட்ரோலிய அமைச்சர் சந்திப்பு

Read Time:1 Minute, 20 Second

ai06.jpgகச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் முதல் முறையாக அதிகபட்சமாக 2 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். ஏற்கனவே, பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் காஸ் விலை உயர்த்தப்படாததால், ரூ. ஆறாயிரத்து 500 கோடி வருவாய் இழப்பில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தற்போது, மேலும், நிதிச்சுமையை சந்திக்க நேரிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த இழப்பை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டிருந்தன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பேரல் ரூ. மூன்றாயிரத்து 480க்கும் அதிகமாக உள்ள நிலையில், இது தொடர்பாக மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் முரளி தியோரா ஆலோசனை நடத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போதை மருந்து புகார்: டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் திடீர் ஓய்வு
Next post மும்பைக்கு உதவ ஜெர்மனி தயார்: ஏஞ்சலா அறிவிப்பு