மனைவி கழுத்தை நெரித்து படுகொலை: கணவர் கைது!!

Read Time:4 Minute, 7 Second

166350563crime-arrestமடிப்பாக்கம் லட்சுமி நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மகன் முரளிகிருஷ்ணன் 10–ம் வகுப்பும், மகள் சங்கீதா 9–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ராமகிருஷ்ணன், ஊட்டியில் அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது சென்னைக்கு வந்து ஒருநாள் மட்டும் குடும்பத்தினருடன் தங்கி இருந்து விட்டு மறுநாளே ராமகிருஷ்ணன் ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்று விடுவார்.

அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

மனைவி ராஜேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராமகிருஷ்ணன் கடந்த ஓராண்டுக்கு முன்னர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மடிப்பாக்கம் பகுதியில் தற்போது ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராமகிருஷ்ணன் ஊட்டியில் இருந்து வந்திருந்தார்.

நேற்று காலையில் மகனும், மகளும் பள்ளிக்கு சென்று விட்ட பின்னர் ராமகிருஷ்ணனுக்கு, ராஜேஸ்வரிக்கும் இடையே வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணனை பார்த்து ‘‘நீங்கள் செய்வது ஒன்றும் சரியில்லை. இதே நிலை நீடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’’ என்று மிரட்டல் விடுத்தார்.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரியை சரமாரியாக கையால் தாக்கினார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதன் பின்னர் மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் வரை மனைவியின் உடலுடன் ராமகிருஷ்ணன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். மகனும், மகளும் வீட்டுக்கு திரும்பிய பின்னர்தான் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டேன் என்று ராமகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தாய் கொலை செய்யப்பட்டு தந்தையும் கைதாகி விட்ட நிலையில், மகன் முரளிகிருஷ்ணன், மகள் சங்கீதா ஆகியோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கதறி அழுதபடி காட்சி அளிக்கும் அவர்களை உறவினர்கள் ஆறுதல்படுத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொய்யாப்பழம் பறித்த சிறுவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் கைது!!
Next post ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!!