நல்லாட்சியை விரும்பாதவர்களின் செயற்பாடே ப்ளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!!

Read Time:2 Minute, 27 Second

137773618Kabirகொழும்பு ப்ளுமெண்டல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, சிறந்த அரசியல் கலாச்சாரம் ஒன்றை காண விரும்பாத குழு, பயங்கரவாதத்தை விதைத்து, தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கும் நடவடிக்கையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாக்கவின் ஆதரவாளர்கள் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையினுள் கௌரவமான அரசியல் முறையொன்றை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை இவ்வாறான கீழ்த்தரமான செயல்கள் மூலம் திசை மாற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 08ம் திகதி நாட்டினுள் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியின் மூலம் நீதியான முறையில் தேர்தலை நடத்திச் செல்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் முடிந்துள்ளது.

அது அரசாங்கம் வன்முறைக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடம் வழங்காமையினாலே.

எனினும் இதுபோன்ற கோழைத்தனமான செயற்பாடுகளினால் நாம் பெற்ற நல்லாட்சியின் வெற்றியை திசை திருப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் வௌியிட்டுள்ள அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரவியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; 12 பேர் காயம்!!
Next post போயா தினத்தில் விகாரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 04 பேர் கைது!!