17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!!
குஜராத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சின்ஹா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து தனது மகள் காணாமல் போனதாக அவரது தந்தை அங்குள்ள மணிநகர் காவல்நிலையில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மணிநகர் காவல் நிலையத்திற்கு வந்த அச்சிறுமி, தனது சக ஆண் நண்பர் உள்பட 4 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் மற்றும் இவர்களுக்கு உதவிய ஒருவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளியை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.