By 1 August 2015 0 Comments

மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)!!

timthumb (7)மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)

உண்மையில் ரங்கா தமிழன்தானா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையின் மலைநாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தமிழர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலேயே பலரும் வாழ்ந்து வருகின்றார்கள்.

சில சிங்கள நகரங்களுக்குள் மறைந்துள்ள ஸ்டேட்களில் வாழும் தமிழர்கள் அடையாள அட்டையில்லாமல், பதிவு திருமனம் இல்லாமல் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். படித்த ஒரு சிலரையும் சிங்கள அரசாங்கங்கள் விலைக்கு வாங்கி விடும் துர்பாக்கிய நிலைமையையும் அவதானிக்க முடிகிறது.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தங்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க ஒரு விடுதலை வீரன் உருவாக மாட்டானா? என்று ஏங்கித் தவிப்பதும், சிங்கள அரசாங்கத்தின் ஒரு கைபொம்மை தன்னை மலையக தமிழர்களின் விடுதலை நாயகனாக காட்டிக் கொண்டு, அவர்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வந்து, சிங்கள அரசாங்கம் கொடுக்கும் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதும் வாடிக்கையானதொன்றாகும்.

இந்த வரிசையில் சக்தியின் ரங்கா சற்று வித்தியாசமானவன். இவன் இந்தியாவிலிருந்தோ, மலைநாட்டிலிருந்து மலையக தமிழரை ஏமாற்றவில்லை. ஈழத்தமிழரையும் மலையகத் தமிழரையும் மற்றுமல்லாது தமிழ் பேசும் முஸ்லீம்களையும் ஏமாற்ற மானிப்பாயில் பிறந்து, வவுனியாவில் வளர்ந்த ஈழத்தமிழன். மகிந்த கொடுத்த சொகுசு வாழ்க்கைக்காக, சொந்த மண்ணையும் சொந்த இனத்தையும் சொந்த மொழியையும் காட்டிக் கொடுத்த மகாதுரோகி!!

பல வருடங்களாக தமிழ்மக்களுக்கு இவன்மீது சந்தேகம் இருந்தாலும் ஆதாரம் இல்லை என்பதால் இவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. காரணம் இவனுக்குள்ள அரசியல் பலத்தையும் மகாராஜா நிறுவனத்தின் பண பலத்தையும் பாவித்து எதிரிகளை அடியோடு அழித்து விடுவான் என்ற அச்சம்.

ஆனால் இப்பொழுது நிலை அப்படியல்ல. ரங்கா அரசியல் பலம் இழந்தவனாக இருக்கிறான். யாருடைய அரவணைப்பில் அரசியல் செய்தானோ அந்த மகிந்த இப்பொழுது பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றவர். வெள்ளை வானுக்கும் சூறா மீனுக்கும் பயப்படாமல் இப்பொழுது எழுதலாம். மகாராஜா நிறுவனத்தின் பண பலத்துக்கு சிங்களவர்கள் அடிமையாகலாம். ஆனால் தமிழர்கள் (ரங்கா போன்றவர்களை தவிர) அடிமையாக மாட்டார்கள்.

இவன் சக்தி டீவியில் இணைந்து, அங்கிருந்த திறமையான அறிவிப்பாளர்களையெல்லாம், தன் தனித்திறமையான பந்தம் பிடிப்பது, மாமா வேலை பார்ப்பது போன்ற திறமைகளால் ஓரங்கட்டி, மின்னல் வேகத்தில் சக்தியில் உயர்பதவியை பிடித்தவன் இந்த மின்னல் ரங்கா.

ஊடகத்தில் தமிழ் மக்களை ஏமாற்றும் மின்னல் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து, ‘மாராஜா’வாக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டான். சில அரசியல்வாதிகளை புலிகளுக்கு எதிராக பேசவைத்து, அவர்கள் உயிரை குடித்த பெருமையும் இந்த ரங்காவையே சேரும்.

தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளை எப்படி பலிவாங்குவது என்று மிகவும் நிதானமாக திட்டம்தீட்டி கிளிப்பிள்ளைகளான அரசியல்வாதிகளுக்கு தான் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொடுத்து, அதை அவர்கள் பேசுவது போல் பேச செய்து சாதனை படைத்த ரங்காவின் சாதனை கடந்த ஜுலை 5ம் திகதி உலக சாதனையாக மாறியது.

சக்திவேல் என்ற அரசியல்வாதி சக்தி டீவியில் மின்னப்போய் மின்னல் நிகழ்ச்சியில் மங்கிப்போன ஒரு வீடியோ இணையத்தளங்களில் உலா வருகிறது. சக்திவேலுக்கு லயத்தில் சாண அபிஷேகம் கிடைக்குமோ இல்லையோ கட்டாயம் ரங்காவுக்கு சாண அபிஷேகத்தால் மலையக தமிழர்கள் அபிஷேகம் பண்ணுவாகள் என்பது நிச்சயம்.

கையும் கலவுமாக சிக்கிய ரங்கா இனிமேலும் தமிழர்களை காட்டிக் கொடுப்பானா? மகாராஜா நிறுவனம் தொடர்ந்தும் ரங்காவை நம்பி தன் வியாபாரங்களை செய்யுமா? ராஜபக்ஷவின் தமிழரை அழிக்கும் நரித்தந்திரத்தின் பகடக்காயாய் மாறிய ரங்கா போன்று இன்னும் உள்ள இனத்துரோகிகளை இனம்கண்டு அவர்களையும் சமுகத்துக்கு வெளிச்சம்காட்டும் பொறுப்பு எம்மையே சுமருகிறது.

(மேலதிக விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்வையிடுங்கள். இந்த வீடியோவை எடிட் செய்து பதிவேற்றியவர் யாராக இருந்தாலும் தமிழ் பேசும் அனைத்து மக்களினதும் பாராட்டுக்குறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

-சகலகலா வல்லவன்Post a Comment

Protected by WP Anti Spam