பிரதமரைப் பாதுகாக்க வாழ்வையே தியாகம் செய்யத் தயார் – சஜித்!!
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமரைப் பாதுகாக்க எனது வாழ்வையேத் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற தேர்தல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது கட்சித் தலைவரான பிரதமரை பேணிக் காக்க என்னால் முடிந்ததைச் செய்வேன் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.