கிராம பஞ்சாயத்து 2 லட்சம் அபராதம் விதித்ததால் விவசாயி தற்கொலை!!

Read Time:1 Minute, 31 Second

796d5412-d466-4382-bf21-4067f0779fd4_S_secvpfபெங்களூரில் கிராம பஞ்சாயத்து 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சல்குன்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சித்திரமேகவுடா. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சித்திரமேகவுடாவுக்கு கிராம பஞ்சாயத்து 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சித்திரமேகவுடா கடந்த ஜூலை 12 ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்திரமேகவுடா நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகையே சோகத்தில் ஆழ்த்திய மலேஷிய விமானம் குறித்த புதிர் அவிழ்ந்தது!!
Next post ராஜஸ்தானில் காமெடி: கற்பழிப்பு குற்றவாளி ஆசாராம் பாபு பாடப் புத்தகத்தில் புனிதராக சித்தரிப்பு!!