எதிர்கால பெரிசுகளும் இந்தகால நமீதாவும்!

Read Time:2 Minute, 27 Second

namitha05.jpgஐம்பதை தாண்டிய பெரிசுகளுக்கு தெரியும் ஜெயமாலினியின் அருமை. நவீன ஜெமாலினியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நமீதா, ஜெயமாலினி நடித்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் எப்படியிருக்கும்? இப்போதிருக்கிற யூத்துகள், ஐம்பதில் அசைபோட சவுகர்யமாக இருக்கும்! இதைதான் எதிர்கால திட்டம் என்பார்களோ? ஜெயமாலினி நடித்த ஜெகன்மோகினி படத்தை மறுபடியும் எடுக்க போகிறார்கள். ஹீரோயின் நம்ப 60 கிலோ ஐஸ்கிரீம் நமீதாவேதான். புடவை கட்டி நடிக்க ஆசையாகதான் இருக்கிறது. ஆனா என்னோட உடல்வாகுக்கு எந்த டிரஸ்சில் நடித்தாலும் கவர்ச்சியாதான் இருக்கும் என்கிற நமீதாவின் அப்பா சூரத் நகரில் பெரிய துணி வியாபாரி. அவ்வப்போது சந்தடியில்லாமல் தியேட்டருக்கு போய் தன்னுடைய பர்ஃபாமென்ஸ் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு போதை ஏற்றுகிறது என்பதையும் கவனித்து வருகிறார் நமீ. சின்ன சின்ன மூவ்மென்ட்ஸ் ஆகட்டும், வேகமான ஆட்டம் ஆகட்டும், எல்லாத்தையும் கைதட்டி ரசிக்கிறாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! சொல்லும்போதே புல்லரிக்கிறது நமீதாவுக்கு.

இம்மாம் பெரிய ஐஸ்கிரீமுக்குள்ளும் சூடாக புழுங்கிக் கொண்டிருக்கிறது ஒரு விஷயம். கெட்டவன் ஷ§ட்டிங் தள்ளி போகுதாமே? சிம்புவோட ஜோடி சேர்ந்து இன்னொரு ஏரியாவை கலக்கலாம் என்று பார்த்தால், எப்போ தேதி கேட்பாங்க? எப்போ ஷ§ட்டிங் ஆரம்பிப்பாங்க? எதுவுமே தெரியலையே. ஆனா, எப்போ ஆரம்பிச்சாலும், நான் இருக்கேன் அந்த படத்திலே! அதுமட்டும் உறுதி என்கிறார் நம்பிக்கையோடு! சிம்பு…கேட்குதா நமீதா சொல்றது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post பாகிஸ்தான் கடந்து வந்த பாதை