பாதாள உலகக்குழு குறித்து சிவில் அமைப்புக்கள் மௌனம்!!
கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனக் கொள்கையை கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து பிரச்சாரங்களும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவில்லை என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் கூறினார்.