இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் வைத்தியசாலையில்!!
கொழும்பு – கண்டி பிரதாண வீதியில் நிட்டம்புவை, ரதாவதுன்ன பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இபோச பஸ் ஒன்றும் குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.