மஹிந்தவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி!!
அரச சேவைகளில் மேலும் 60,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இளைஞர் யுவதிகளின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பல சலுகைகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.