வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை!!
வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையே இவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.